“இப்படி ஒரு உறவு தேவையே இல்ல” – சமந்தா குறித்து நாக சைத்தன்யா!

நடிகை சமந்தாவுக்கும், நாக சைத்தன்யாவுக்கும், கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று, விவாகரத்து ஆனது. இதையடுத்து, இருவரும் தங்களது பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சமந்தா சமீபத்தில் அளித்த சில பேட்டிகளில், “நாக சைத்தன்யாவுடன் விவாகரத்து ஆன பிறகும், அந்த உறவு நட்பாக தொடரலாம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கஸ்டடி படத்தின் புரோமோஷனுக்காக, நாக சைத்தன்யா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “பிரிய வேண்டும் என்று முடிவு செய்த பிறகு, எதற்காக நட்புடன் தொடர அந்த உறவு தொடர வேண்டும்.

இவ்வாறு பேசுவது, எனக்கு எரிச்சலை தான் தருகிறது.. இப்படியான நட்பு எனக்கு தேவையே இல்லை” என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News