Connect with us

Raj News Tamil

தெருவில் நிர்வாணமாக சுற்றிய இளைஞர்! காதலிக்காக தான் இப்படி செய்தாரா?

தமிழகம்

தெருவில் நிர்வாணமாக சுற்றிய இளைஞர்! காதலிக்காக தான் இப்படி செய்தாரா?

காதலியின் ஆசைக்காக, இளைஞர்கள் தங்களால் முயன்ற பல்வேறு விஷயங்களை செய்வது வழக்கம். அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்கி கொடுப்பது, விரும்பும் இடங்களுக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு ஆசைகளை நிறைவேற்றுவார்கள். ஆனால், தற்போது இளைஞர் ஒருவர், தனது காதலிக்காக விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரி என்ற பகுதியில் உள்ள தெருவிற்கு, கடந்த 3 நாட்களுக்கு முன்பு, நள்ளிரவில் கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரில் இருந்து நிர்வாணமாக வெளியேறிய இளைஞர், அந்த தெருவில் இறங்கி நடமாடியுள்ளார்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரை தெருவுக்குள் நிறுத்திவிட்டு, பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்கு அவர் வந்திருக்கலாம் என்றும், காதலியின் வீட்டிற்கு செல்வதற்காக இப்படி நிர்வாணமாக வந்திருக்கலாம் என்றும், பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அந்த காரின் கண்ணாடிகளில், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதால், உள்ளே பெண் இருந்தாரா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவில்லை. இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top