லீக்கான காட்சி.. கடுப்பான லோகேஷ் கனகராஜ்.. கூலி படத்தில் கொடூர வில்லனாக நாகர்ஜூனா..

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி என்ற திரைப்படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில், நடிகர் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாகிர், நாகர்ஜூனா என்று மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில், நடிகர் நாகர்ஜூனா நடித்திருந்த மிகவும் பரபரப்பான காட்சியின் வீடியோ, இணையத்தில் லீக்காகியுள்ளது.

இந்த வீடியோவில், கூலி பணியாளர் ஒருவரை, நாகர்ஜூனா கொடூரமாக அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருவதை அறிந்த லோகேஷ் கனகராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ஒரேயொரு வீடியோ பதிவால், பல நபர்களின் இரண்டு மாத உழைப்பு வீணாகிவிட்டது. இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று நான் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News