அனுமதி இன்றி போராட்டம் – சீமான் கைது!

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து, அனைத்து அரசியல் கட்சியனரும், தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். நேற்று, அதிமுக கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து, பொதுமக்களிடம் துண்ட பிரசுரம் வழங்கப்பட்டது. இவ்வாறு தொடர்ச்சியாக, கண்டனங்களும், போராட்டமும் நடந்து வரும் நிலையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில், நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆனால், அனுமதி இல்லாமல் இந்த போராட்டம் நடத்தப்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை, கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News