இந்திய அளவில் முட்டை ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கத்தார், ஈராக், மாலத்தீவு, ஓமன், ஈரான் போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த நிலையில் உலக கால்பந்து போட்டி நடைபெரும் கத்தார் நாட்டில், முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் சுமார் ஒன்றரை கோடி முட்டைகளை கத்தாருக்கு ஏற்றுமதி செய்ய முட்டை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். முட்டை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் துருக்கியில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் நாமக்கல் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.