திமுகவின் பொதுச்செயளாலரகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் பேராசிரியர் அன்பழகன். இவரது நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படும் டிபிஐ வளாகத்தில் அவரது சிலை நிறுவப்பட்டு, பேராசிரியர் அன்பழகன் வளாகம் என்று அழைக்கப்படும் என முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு நடப்பு ஆண்டிற்கு சுமார் 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆண்டுதோரும் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.