Connect with us

Raj News Tamil

நான் ரெடி பாடலில் இதையெல்லாம் கவனிச்சீங்களா? டீகோடிங் செய்த நெட்டிசன்கள்!

சினிமா

நான் ரெடி பாடலில் இதையெல்லாம் கவனிச்சீங்களா? டீகோடிங் செய்த நெட்டிசன்கள்!

தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கில் வெளியானது. நான் ரெடி தான் என்று தொடங்கும் இந்த பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை கடந்து, சாதனை படைத்தது.

இந்த பாடலை ரீப்பீட் மோடில் கேட்டு வரும் ரசிகர்கள், அதில் உள்ள நுனுக்கங்கள் பலவற்றை கண்டறிந்து, இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, கில்லி படத்தில் சூறத் தேங்கா அட்ரா அட்ரா என்ற பாடலில், விஜய் ஒரு நடன அசைவை வெளிப்படுத்தியிருப்பார்.

இதேபோன்ற, நடன அசைவு, நான் ரெடி தான் பாடலிலும் இடம்பெற்றுள்ளதாம். மேலும், மில்லி உள்ளே போனா.. கில்லி வெளியே வருவான் டா, போன்ற வரிகளும், கில்லி படத்தின் Reference-ஐ கொண்டுள்ளது. இதற்கு முன்னர், விஜய்-லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்திலும், கில்லி படத்தின் Reference இடம்பெற்றிருக்கும்.

இதன்மூலம், விஜய் படங்களிலேயே கில்லி படத்தை தான், லோகேஷ் அதிக விரும்புகிறார் என்பது உறுதி ஆவதாக, நெட்டிசன்கள் டீகோட் செய்த வருகின்றனர். இன்னும் பல தகவல்கள், அந்த பாடல் முழுவதும் நிறைந்திருப்பதாக, கூறி வருகிறார்கள். அதனை PART 2-வில் பார்க்கலாம்..

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top