Connect with us

Raj News Tamil

ரசிகரின் கன்னத்தில் பளார்.. சர்ச்சையில் சிக்கிய காலா பட வில்லன்..

சினிமா

ரசிகரின் கன்னத்தில் பளார்.. சர்ச்சையில் சிக்கிய காலா பட வில்லன்..

இந்தி மற்றும் மராத்தி சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் நானா படேகர். இவர் தமிழில், பொம்மலாட்டம், காலா ஆகிய இரண்டு படங்களில் மட்டும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மீடூ புகாரில் சிக்கியிருந்த இவர், தற்போது, இன்னொரு சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார்.

அதாவது, உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி பகுதியில், ஜர்னி என்ற படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் கலந்துக் கொண்ட நடிகர் நானா படேகரிடம், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார்.

ஆனால், இதற்கு உடன்படாத அவர், அந்த ரசிகரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top