போதைப் பொருள் கடத்தல் வழக்கு விவகாரம் தொடர்பாக, டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் வீட்டின் முன்பு சம்மன் ஒட்டிய நிலையில் தற்போது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.
இது குறித்து இயக்குநர் அமீர் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
அமீர் பேசியதாவது, என்னுடைய இறைவர் மிக பெரியவன் படத்தின் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் பற்றி என்னுடை நிலைப்பாட்டை தெள்ள தெளிவாக விளக்கிய பிறகும் சிலர் என் மீது போரன்பு கொண்ட ஊடகவியலாளர்களும், நண்பர்களும், தொடர்ச்சியாக சமூக வலைதள பக்கங்களிலும், ஊடகங்களிலும் குற்றச்செயலோடு என்னை தொடர்புபடுத்தி வீடீயோகள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது.
அவர்கள் அனைவருக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். அடிபடையாகவே மது, விபசாரம், வட்டி போன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட மார்க்கத்தை கும்பிட கூடியவன் நான், அப்படி இருக்கையில் இது போன்ற குற்றச்செயலில் என்னை தொடர்புபடுத்தி பேசுவது என்பது எனது பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, எனது குடும்பங்களுக்கு மனஉடைச்சல் ஏற்படுத்த முடியுமே தவிர வேற எந்த பயனையும் நீங்கள் அடைந்து கொள்ள முடியாது.
நீங்கள் சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கின்றார்கள், சம்பந்தப்பட்ட துறைச்சார்ந்த அதிகாரிகள் இருக்கின்றார்கள், இன்னும் பல்வேறு துறையினர் இருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் என்னை விசாரனைக்கு அழைத்தாலும் வர தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்த சோதனை காலகட்டத்திலும் என் மீது அன்பு கொண்டு, என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் இறைவன் மிக பெரியவன் நன்றி. என்று தெரிவித்தார்.