உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தாக்கல் செய்த வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் சொத்துவிவரங்களின் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பத்திரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோடியின் பெயரில் ரூ. 2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் வைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.