நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து, இன்று பிரதமர் பதவியேற்பு விழா அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்தது.
பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இரவு 7.15 மணிக்கு விழா தொடங்கியதும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.