இந்தியா
செல்போனில் திடீரென வரும் அபாய ஒலி.. அச்சத்தில் பொதுமக்கள்.. உண்மை இதுதான்..

புயல், வெள்ளம், நிலச்சரிவு, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும்போது, பொதுமக்கள் அதில் சிக்கிக் கொள்வது வழக்கம்.
அவ்வாறு சிக்கிக் கொள்ளும் பொதுமக்களை, பாதுகாப்பாக மீட்பதும், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் பணியாக இருந்து வருகிறது.
இவ்வாறு இருக்க, இன்று காலை முதல், அனைவரது செல்போன் எண்ணுக்கும், அபாய ஒலி கொண்ட விநோத மெசோஜ் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.
அந்த மெசெஜில், “இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை மூலம், செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்ட்ட மாதிரி சோதனைச் செய்தி. உங்கள் முடிவில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது செல்போன்களை யாராவது ஹாக் செய்துவிட்டார்களோ என்ற பயமும், பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தது.
தற்போது, அது உண்மையிலேயே மத்திய அரசின் மூலமாக அனுப்பப்பட்ட மெசேஜ் தான் என்பதும், அதுகுறித்து எந்தவித பயமும் கொள்ள வேண்டியதில்லை என்றும், தெரியவந்துள்ளது.
