அரசியல்
தேசிய பத்திரிகையாளர்கள் தினம்… அறம் சார்ந்த இதழியாளர்களுக்கு வாழ்த்துக்கள் ஸ்டாலின் ..!
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படுவது பத்திரிகைத்துறை. உலகத்தில் நிகழக்கூடிய சம்பவங்களை துல்லியமாக பொது மக்களுக்கு தெரியும் வகையில் உழைக்கும் துறையாக விளங்குகிறது.
அந்த வகையில் தேசிய ப்ரெஸ் கவுன்சில் தொடங்கப்பட்ட நாளான 1998, நவம்பர் 16-ஆம் தேதி முதல் தேசிய பத்திகையாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேசிய பத்திரிகை தினமான இன்று முதலைமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்கு சொல்வதே இதழியல் அறம்..! அறம் சார்ந்து செயல்படும் இதழியாளர்களுக்கு #National press day வாழ்த்துக்கள்..! என பதிவிட்டுள்ளார்.
