Connect with us

Raj News Tamil

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்..!!

அரசியல்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்..!!

ஒடிசாவின் முதல்வராக, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். இம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்., 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து நவீன் பட்நாயக் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அக்கட்சி தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top