Connect with us

Raj News Tamil

விபத்தில் சிக்கிய அனுஷ்காவின் ஜோடி.. கையில் எலும்பு முறிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சினிமா

விபத்தில் சிக்கிய அனுஷ்காவின் ஜோடி.. கையில் எலும்பு முறிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

நீண்ட நாட்களுக்கு பிறகு, அனுஷ்கா நடிப்பில் தமிழ் – தெலுங்கு மொழியில் உருவாகியிருந்த திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி.

ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இப்படத்தில், தனது காமெடியான வசனங்கள் மூலம், தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நவீன் பொலிஷெட்டி.

வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடிய இவர், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர், டல்லாஸ் என்ற பகுதியில் பைக்கில் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், நவீன் பொலிஷெட்டிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர், தற்போது குணமாகி வருகிறார். இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top