குழந்தைகளுக்காக இந்த பழக்கத்தை கைவிட்ட நயன்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர், இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இவர்களுக்கு, இரட்டை குழந்தையும், சமீபத்தில் பிறந்துள்ளது. இந்நிலையில், தனது குழந்தைகளுக்காக, நீண்ட பழக்கம் ஒன்றை, நயன் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஒவ்வொரு பிறந்த நாளையும், வெளிநாட்டில் தான் நயன் கொண்டாடுவாராம். ஆனால், இந்த முறை, அவர் வெளிநாடு செல்லவில்லையாம். வீட்டிலேயே பிரம்மாண்டமாக கொண்ட உள்ளாராம்.