இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவிற்கும் நேரம் சரியில்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், நடிகை நயன்தாரா சமீபத்தில் நடித்த எந்தவொரு திரைப்படமும், பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை.

இதுமட்டுமின்றி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார் என்று பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விக்னேஷ் சிவனுக்கும், அஜித்தின் 62-வது பட வாய்ப்பு பறிப்போயுள்ளது. இதனால், மன உளைச்சலில் உள்ள இந்த தம்பதியினர், தங்களது ஜோசியரிடம் ஆலோசனை கேட்டனராம்.
அதற்கு, நீங்கள் திருமணம் செய்துக் கொண்ட நேரத்தால் தான், இவ்வாறு நடக்கிறது. எனவே, நீங்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ஜோசியர் கூறியுள்ளார். எனவே, இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்ய உள்ளனர்.