நடிகை நயன்தாராவிற்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே, நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பின்போது காதல் மலர்ந்தது. இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.
மேலும், வாடகைத் தாய் முறையின் மூலம், இரண்டு குழந்தைகளை இந்த தம்பதியினர் பெற்றெடுத்தனர். இந்நிலையில், இந்த குழந்தைகளின் பெயரை, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அறிவித்துள்ளனர்.
அதன்படி, உயிர் ருத்ரோனில், உலக் தெய்விக் என்றும் இரண்டு குழந்தைகளுக்கும் அவர்கள் பெயர் வைத்துள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளுக்கும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் பெயர்களும், இன்ஷியலாக வைக்கப்பட்டுள்ளது.