தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் நடிகை நயன்தாரா. முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளம் கொண்ட இவர், அஜித்தின் பில்லா, விஜயின் வில்லு உள்ளிட்ட சில படங்களில் பிகினி உடை அணிந்து, கவர்ச்சியாக நடித்திருந்தார்.
ஆனால், உச்ச நட்சத்திரமாக மாறிய பின், கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை நயன்தாரா மீண்டும் பிகினி உடையில் திரையில் வர இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில், நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தான் குறிப்பிட்ட காட்சி ஒன்றில், அவர் இவ்வாறு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பதான் படத்தில் நடிகை தீபிகா படுகோன் பிகினி உடையில் நடித்திருந்தது, படத்தின் புரமோஷனுக்கு உதவியது போல், இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைப்பதற்கு, அட்லி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள படக்குழு, நடிகை நயன்தாரா பிகினி உடையில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. பில்லா, வில்லு போன்ற படங்களில் கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்ததாகவும், இந்த படத்தில் இதுமாதிரியான காட்சி தேவைப்படவில்லை.
அதனால் நயன்தாரா அப்படியெல்லாம் நடிக்கவில்லை என்றும், படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. திருமணமாகிய பின் நயன்தாரா பிகினி உடையில் நடிக்கிறாரா என்று அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், படக்குழுவின் விளக்கத்திற்கு பின், சாந்தம் அடைந்தனர்.