தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சிம்பு என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர், சினிமா மட்டுமின்றி, வேறு சில வியாபாரங்களில் முதலீடு செய்து வருகிறார்.
அதாவது, ரியல் எஸ்டேட் தொழில்களிலும், சாய் வாலே என்ற டீக்கடை வியாபாரத்திலும், தனது பணத்தை முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில், தனது அடுத்தகட்ட முயற்சியாக, பிரபல திரையரங்கம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். வடசென்னையில் உள்ள பழம்பெரும் திரையரங்குகளில் ஒன்று அகஸ்தியா.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்து திரைப்படங்களை திரையிட்டு வரும் இந்த திரையரங்கம், கடந்த 2020-ஆம் ஆண்டு அன்று, இழுத்து மூடப்பட்டது.
தற்போது, இந்த திரையரங்கை வாங்கியுள்ள நயன்தாரா, அதனை புதுப்பித்து, இன்னும் 2 திரையரங்குகள் கட்டவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.