நயன்தாரா படத்தை வெளியிட மாட்டோம்..!

மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். தற்போது நயன்தாரா நடிப்பில் கனெக்ட் என்ற திரைப்படத்தை உருவாக்கிவரும் இவர், டிசம்பர் 22-ஆம் தேதி திரையிட திட்டமிட்டுள்ளார்.

tamil cinema news

இந்த திரைப்படம் 90-நிமிடங்கள் மட்டுமே என்பதால் இடைவெளி இல்லாமல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தியேட்டர் உரிமையாளர்கள், இடைவெளி இல்லாமல் திரைப்படத்தை வெளியிட முடியாது என்று கூறிவருகின்றனர். இதனால் இப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.