நயன்தாராவின் கனெக்ட் பட விமர்சனம் – எப்படி இருக்கு?

படத்தை பற்றி விவரம்:-

நயன்தாரா,வினய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் கனெக்ட். அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரித்வி சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை:-

வினய், நயன்தாரா இருவரும் கணவன் மனைவி. இவர்களது மகள் அனியா நபீசா. நயன்தாராவின் தந்தை சத்யராஜ். மகிழ்ச்சியாக இவர்களுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது திடீரென கொரோனா பரவுகிறது. நாடு முழுவதும் முழு அடைப்பு பிரகடனப்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக வினய் மருத்துவமனையிலேயே தங்கி கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அப்போது கோவிட் தாக்கி வினய் இறந்து விடுகிறார். தந்தையின் பிரிவைத் தாங்க முடியாத மகள் தந்தையின் ஆவியோடு பேச முயற்சிக்கிறார். அதில் ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

விமர்சனம்:-

கதையில் நாயகன், நாயகி எல்லாமே நயன்தாரா தான். எல்லா காட்சிகளிலும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். அப்பாவாக வரும் சத்யராஜ் தனது அனுபவ நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். வினய் சிறிது நேரமே வந்தாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

சிறிய கதைதான் என்றாலும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேக்கிங்கில் மெருகேற்றி மிரட்டியிருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன். ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி, இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகர் இருவரும் போட்டி போட்டு வேலை செய்துள்ளனர்.

மெதுவாக நகர்ந்தாலும் படத்தின் பெரும் பகுதி விறுவிறுப்பாகவே இருக்கிறது. ஏற்கெனவே நாம் பார்த்துப் பழகிப்போன காட்சிகளாகவே இருந்தபோதும், கதையோட்டத்தோடு ரசிகர்களை ஒன்றவைக்கிறது இந்தப் படம்.