நயன்தாராவின் அதிரடி முடிவு.. இந்த வயதிலா?

30 வயதிற்கு மேலே உள்ள நடிகைகளே, தொடர்ச்சியாக கதாநாயகியாக நடிக்க முடியாமல் தடுமாறும் நிலையில், 40 வயதான நயன்தாரா தொடர்ச்சியாக, அந்த நிலையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், சில படங்களில், கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கும் படங்களிலும் அவர் நடித்து, அசத்தி வருகிறார். ஆனால், சமீப காலங்களாக, அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள், தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், நடிகை நயன்தாரா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ராஜா சாப் என்ற படத்தில், நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், கவர்ச்சி பாடல் ஒன்றிற்கு, நடிகை நயன்தாரா நடனம் ஆட உள்ளாராம்.

இந்த தகவல், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்னர், சிவகாசி, சிவாஜி, எதிர்நீச்சல் உள்ளிட்ட சில படங்களில், ஒரு பாடலுக்கு மட்டும் நயன்தாரா நடனம் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News