“அப்ப அதெல்லாம் பொய்-ஆ கோபால்” – நயன்தாரா குறித்து வெளியான புதிய தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. நடிப்பது மட்டுமின்றி, திரைப்படங்கள் தயாரிப்பது, ரியல் எஸ்டேட் பணிகள் என்று பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறார்.

இந்நிலையில், வடசென்னையில் இருந்த அகஸ்தியா திரையரங்கை நயன்தாரா வாங்கியுள்ளதாகவும், அங்கு மல்டி பிளக்ஸ் திரையரங்கம் அமைக்க இருப்பதாகவும, சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் குறித்து, அகஸ்தியா திரையரங்க நிர்வாகம், விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, அகஸ்தியா திரையரங்கம் அமைந்துள்ள இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானது என்றும், அதனால் யாரும் அந்த இடத்தை விற்பனை செய்ய முடியாது என்றும், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், நயன்தாரா திரையரங்கை வாங்கியுள்ளதாக வெளியான தகவல், வதந்தி என்று தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News