மீண்டும் ராஜா, ராணியாக இணையும் நயன்தாரா ஜெய்..!

கடந்த 2013-ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராஜா ராணி. இந்த படத்தில் நயன்தாரா, ஜெய், ஆர்யா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இதில் ஜெய் மற்றும் நயந்தாரா ஜோடியின் நடிப்பு அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. மேலும் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் நயன்தாரா மற்றும் ஜெய் இணைந்துள்ளது அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நடிகர் ஜெய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, லேடி சூப்பர் ஸ்டார் 75 என்ற போஸ்டரை வெளியிட்டு படக்குழு சப்ரைஸ் கொடுத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News