“எனக்கு குழந்தை வேண்டும்” – நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர், இயக்குநர் விக்னேஷ் சிவனை, நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, குழந்தை பெற்றுக்கொள்வதற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, நடிகை நயன்தாரா, தற்போது கைவசம் சில திரைப்படங்களை வைத்துள்ளார்.

அந்த திரைப்படங்கள் அனைத்திலும் நடித்து முடித்த பிறகு, சினிமாவில் இருந்து விலக உள்ளாராம். குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா எடுத்துள்ள இந்த முடிவால், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.