Connect with us

Raj News Tamil

பிரபல நடிகருடன் இணையும் நயன்தாரா!

சினிமா

பிரபல நடிகருடன் இணையும் நயன்தாரா!

ஓ2, கோல்டு, கனெக்ட், இறைவன், அண்ணபூரணி என்று தொடர்ச்சியாக தோல்வி படங்களை நயன்தாரா கொடுத்து வந்தார்.

இதனால், இவரது மார்கெட் குறைந்தபோதிலும், தனது சம்பளத்தை மட்டும் அவர் குறைத்துக் கொள்ளவே இல்லை என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், இவர் பிரபல நடிகரின் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நடிகர் நிவின் பாலி, டியர் ஸ்டூடன்ட் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் இணைந்து இயக்க உள்ள இப்படத்தில் தான், நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார். இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

More in சினிமா

To Top