சமந்தாவை தொடர்ந்து நயன்தாரா? வரிசையாக சிக்கும் நடிகைகள்!

ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை சமந்தா, சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஹைட்ரஜன் பெராக்சைடை, நெபுலைசரில் சுவாசித்தால், பல பிரச்சனைகள் சரியாகும் என்று கூறியிருந்தார்.

இவரது இந்த பதிவுக்கு, மருத்துவர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடிகை நயன்தாராவும் இதேபோன்ற சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

அதாவது, தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், செம்பருத்தி டீ உடலுக்கு மிகவும் நல்லது என்றும், அது நீரிழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த மருத்துவர் ஆபி பிலிப்ஸ், நயன்தாராவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News