பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?

லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி, தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் பையா. திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும், Cloud Nine Movies என்ற தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, இந்த படத்திற்கு பிறகு தான், தமன்னாவுக்கு அங்கீகாரமே கிடைத்தது. இவ்வாறு இருக்க, இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது தமன்னா கிடையாது என்று தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, இப்படத்தில், முதலில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க இருந்தாராம். ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து தான், தமன்னா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.

RELATED ARTICLES

Recent News