Connect with us

Raj News Tamil

இன்ஸ்டாவில் சாதனை படைத்த நயன்தாரா..!

சினிமா

இன்ஸ்டாவில் சாதனை படைத்த நயன்தாரா..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. எந்தவொரு சமூக வலைதளங்களிலும் கணக்கு தொடராமல் இருந்த இவர், தற்போது புதிய இன்ஸ்டா பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

புதிதாக தொடங்கப்பட்ட இந்த பக்கத்தில், தனது இரட்டை குழந்தைகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, பத்துலட்சம் பாலோயர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்பு, பாலிவுட் ஹீரோயினான நடிகை கேத்ரினா கைஃபுக்கு 24 மணி நேரத்தில் தான் 10 லட்சம் பாலோயர்கள் கிடைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top