Connect with us

Raj News Tamil

ஜெயிலர் பாகம் இரண்டு – 5-வது முறையாக ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

சினிமா

ஜெயிலர் பாகம் இரண்டு – 5-வது முறையாக ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், 600 கோடி ரூபாய் வரை வசூலித்து, அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் காரணமாக, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் 2-ஆம் பாகத்தில் நடிக்க உள்ள கதாநாயகிகளின் விவரம் தெரியவந்துள்ளது.

அதாவது, இப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் நடிக்க உள்ளார்களாம். முதல் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சந்திரமுகி, அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாகவும், சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் இருந்தவர் நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top