நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை, தனது ஆவணப்படத்தில், நயன்தாரா பயன்படுத்தியிருந்தார். இதனால், நடிகர் தனுஷ் அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதையடுத்து, நயன்தாரா அறிக்கை வெளியிட்டு, தனுஷை விமர்சித்திருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மற்றொருவரின் வாழ்க்கையை பொய்யின் மூலமாக அழிக்கும்போது,அதனை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், அது வட்டியுடன் உங்களை தேடி வரும் என்று கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த சிலர், தனுஷ்-க்கு விவாகரத்து ஆகியிருப்பதை தான், நயன்தாரா மறைமுகமாக விமர்சிக்கிறார் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.