‘மேலிட’ உத்தரவு; அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதற்கான காரணம்: ப.சிதம்பரம்!

‘மேலிட’ உத்தரவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கான காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்ற ‘மேலிட’ உத்தரவு அக்கட்சிக்கு வந்துள்ளது என்பதற்கு அக்கட்சி எடுத்துள்ள முடிவே தெளிவான சான்று. தங்களுக்குப் பதிலாக பாமகவை நிறுத்தி, பாஜகவும், அதிமுக திமுகவுக்கு எதிராக போட்டியிடுகின்றன. திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவதை இண்டியா கூட்டணி உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News