இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைந்ததற்கு இட்லி, தேநீர், மஞ்சள் தான் காரணமாம்….ஆய்வில் வெளிவந்த தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 69 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்தில் இருந்தாலும் கொரோனா உயிரிழப்புகள் குறைவாகவே பதிவாகி உள்ளன. இந்தியாவில் இதுவரை 5,31,300 பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ள நிலையில் இறப்பு விகிதம் 1.18% என்ற குறைந்த விகிதத்திலேயே உள்ளது.

குறைவான உயிரிழப்புகள் தொடர்பாக ஸ்விட்சர்லாந்து, பிரேசில், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் இந்தியர்களின் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாகவே கொரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட்லி சாப்பிடுவது, அதிகமாக காய் மற்றும் பழங்களை சாப்பிடுவது தினமும் 1.2 கிராம் அளவுக்கு தேநீர் குடிப்பது, தினசரி சுமார் 2.5 கிராம் அளவுக்கு மஞ்சளை உணவு வகைகளில் சேர்ப்பது உள்ளிட்ட காரணங்களால், இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் அதனால் கொரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News