பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவரே இப்படி நேரடியாக ஆர்எஸ்எஸ் பற்றி குறிப்பிட்டு இருப்பது தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக பத்து ஆண்டுகள் மத்தியிலும் உத்தரபிரதேசத்தில் ஏழு ஆண்டுகளும் ஆட்சியில் இருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.
பாஜக தேர்தல்களில் வெற்றிபெற முக்கிய காரணம் பாஜக பிரச்சாரம் + ஆர்எஸ்எஸ் நடத்தும் லோக்கல் பிரச்சாரம். ஆனால் உத்தர பிரதேசத்தில் இந்த முறை பாஜகவிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் களப்பணிகளை செய்யவில்லை.
இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என ஜேபி நட்டா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.