நீட் விவகாரம்: கவுன்சலிங் நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, ஹரியாணாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பிடித்தது ஆகிய சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பின.

நீட் தேர்வின் முடிவுகளை திரும்பப் பெற்று மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கு இன்று (ஜூன் 11) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. நீட் கவுன்சிலிங் நடத்த எந்த தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் நீட் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News