பிரபல நடிகையை தரதரவென இழுத்து செல்வது யார்? வீடியோ வைரல்!

யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா. பின்னர், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவான், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழில் திரைப்படம் ஒன்றில், நீது சந்திரா நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில், எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக வருகிறது.

அந்த வீடியோவில், நீது சந்திராவை, தரையில் தரதரவென இழுத்து செல்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில், இயக்குநர்கள் சுந்தர் சி-யும், அனுராக் காஷ்யப்பும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.