புதிதாக நடப்பட்ட மின்கம்பத்திற்கு மின் இணைப்பு வழங்க வயலில் விடப்பட்டிருந்த மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (65) இவர் திருத்தணி முருகன் கோயிலில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கடந்த மாதம் துர்க்கை அம்மன் கோயில் அருகே விவசாய நிலத்தில் உடைந்த மின் கம்பத்தை மாற்றி மின்வாரிய ஊழியர்கள் புதிய கம்பம் நட்டனர்.
இருப்பினும், இதுவரை புதிய மின் கம்பத்தில் மின் கம்பிகள் பொருத்தப்படாமல் விவசாய நிலத்தில் விடப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக திருத்தணி பகுதியில் பெய்து வரும் மழையால் விவசாய நிலத்தில் விடப்பட்டிருந்த மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை விவசாய நிலத்திற்கு சென்ற கோவிந்தராஜ் மின் கம்பி மீது கால் பட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் அதே பகுதியில் காட்டுப் பன்றியும் மின்சாரம் பாய்ந்து திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மின்சாரம் துண்டித்து போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த முனிவர் சடலத்தை மீட்டு பிரேத பிரசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.