ஓட்டுனரின் அலட்சியம்; தானாக ஓடிய லாரி ஏறி எட்டு வயது சிறுவன் மரணம்!

ஹைதராபாத்தில் உள்ள அல்வால் பகுதி சேர்ந்த எட்டு வயது சிறுவன் திருப்பால் அங்குள்ள ரிலையன்ஸ் பிரஷ் சாலையில் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தான்.

அப்போது ஓட்டுனர் ஒருவர் ஹேண்ட் பிரேக்கை போடாமல் அலட்சியமாக நிறுத்தி வைத்திருந்த லாரி சாலையின் குறுக்கே தானாக ஓடி அவர்கள் மீது மோதி ஏறி இறங்கியது.

இந்த விபத்தில் சிறுவன் திருப்பால் உடல் நசுங்கி மரணம் அடைந்து விட்ட நிலையில் அவருடைய தாய் படுகாயம் அடைந்தார்.

விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து படுகாயம் அடைந்த தாயை மீட்டு ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் இறந்து போன சிறுவன் திருப்பால் உடல் காந்தி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News