Connect with us

Raj News Tamil

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை: நாளை போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

தமிழகம்

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை: நாளை போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து இருந்தன.

இந்த நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தொழிற்சங்கள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், தொழிலாளர் நல ஆணையத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top