லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் வெளியிடுவதற்கு முன்பே இசை வெளியீட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென அந்த விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாட படத்தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது. அதன்படி லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் லியோ படத்தின் வெற்றி விழாவை வரும் நவம்பர் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் கொண்டாட இருக்கிறோம். விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். எனவே பாதுகாப்பு வழங்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கடிதம் காவல் துறையின் பரிசீலனையில் உள்ள நிலையில் லியோ வெற்றி விழா கொண்டாட்டத்திற்கான விண்ணப்பத்தை நேரு உள்விளையாட்டரங்க அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
நேரு விளையாட்டு அரங்கின் விதிகளின் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டுமாம். ஆனால் லியோ படத் தயாரிப்பு நிறுவனம் 3 நாட்களுக்கு முன்பாகத் தான் நிகழ்ச்சிக்காக விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் இமெயிலில் மீண்டும் விண்ணப்பித்துள்ளது.