இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.