தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். ஜெயிலர் என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றிப் படத்தை கொடுத்த இவர், தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனை நெல்சன் திலீப்குமார் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து, வெற்றிமாறன் திரைப்படம் இயக்குவதாக சமீபத்தில் தகவல் பரவி வந்தது.
இதனால், இவர்கள் இரண்டு பேரும் தான், இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜூனியர் என்.டி.ஆருடன் தற்போது நெல்சன் திலீப்குமார், இணைய இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் தான், இதற்கு காரணம் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.