Connect with us

Raj News Tamil

‘ஜெயிலர்’ வெற்றியால் ஜெட் வேகத்தில் உயர்ந்த நெல்சனின் சம்பளம்..!! எத்தனை கோடி தெரியுமா??

சினிமா

‘ஜெயிலர்’ வெற்றியால் ஜெட் வேகத்தில் உயர்ந்த நெல்சனின் சம்பளம்..!! எத்தனை கோடி தெரியுமா??

‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நெல்சன் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றியை பெற்றது.

இதையடுத்து விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார். இப்படம் தோல்வியடைந்ததால் விஜய் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானார். தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்த இயக்கினார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனையும் செய்துள்ளது. இப்படத்திற்காக நெல்சன் ரூ.22 கோடி சம்பளமாகப் பெற்றதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக, நெல்சனுக்கு சம்பளமாக ரூ.55 கோடி கொடுக்கவும் அந்நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top