லிஃப்ட், டாடா, ஸ்டார் ஆகிய தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் கவின், தற்போது ப்ளெடி பெக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம், வரும் தீபாவளி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் திலீப்குமார், பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், இயக்குநர் சிவபாலன் இப்படத்தின் கதையை கூறியபோது, இதில் நடிப்பதற்கு தனுஷ் சரியாக இருப்பார் என கூறினேன். ஆனால், கவின் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் உறுதியாக இருந்தார்.
படத்தை பார்த்த பிறகு, கவின் வேண்டாம் என்று நான் கூறியது பெரிய தவறு என்பது புரிந்தது என நெல்சன் தெரிவித்துள்ளார்.