6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு செர்லாக் என்ற உணவுப் பொருளை, நெஸ்ட்லே ( Nestle ) நிறுவனம் தயாரித்து வருகிறது. இது, 90-ஸ் கிட்ஸ்களின் விருப்பமான உணவுப் பொருட்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. ஆனால், இந்த உணவுப் பொருள் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள், ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது, India Today இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விசாரணை அமைப்பு, புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வில், Nestle நிறுவனத்தின், செர்லாக் ( Cerelac ) மற்றும் நிடோ ( Nido ) ஆகிய இரண்டு தயாரிப்புகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான சக்கரைகளை சேர்ப்பது தெரியவந்துள்ளது.
மேலும், ஐரோப்பிய நாடுகளில், சர்க்கரையின் அளவை முழுவதுமாக குறைத்துள்ள இந்த நிறுவனம், வளர்ச்சி அடையாத மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டும் தான், இவ்வாறு அதிக அளவிலான சர்க்கரையை பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு serving செர்லாக்கில், 3 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நெஸ்ட்லே நிறுவனத்தின் இந்திய தகவல் தொடர்பாளர் பேசியுள்ளார். அதில், எங்கள் நிறுவனம், கடந்த 5 ஆண்டுகளில், சர்க்கரை அளவை 30 சதவீதம் வரையில் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“எங்கள் தயாரிப்பு பொருட்களின் ஊட்டசத்து தரத்தை நாங்கள் நம்புகிறோம். நிறுவனத்தில் வித்தியாசமான வகைகளுக்கு ஏற்ப, கடந்த 5 ஆண்டுகளுக்குள், நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் 30 சதவீதம் வரை, சர்க்கரை அளவை குறைத்துள்ளது.
தரம், பாதுகாப்பு, ருசியில் எந்தவொரு சமரசமும் செய்துக் கொள்ளாமல், சக்கரையின் அளவை குறைப்பதற்கு, நாங்கள் எங்கள் ஃபார்முலாவை மாற்றிக் கொண்டே இருக்கிறோம்.” என்று கூறினார்.
இதேபோல், மற்ற எந்தெந்த நாடுகளில், எவ்வளவு அளவிலான சர்க்கரைகளை, செர்லாக் மற்றும் நிடோ உணவுப் பொருட்கள் கொண்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்..
தாய்லாந்து – 6 கிராம்
எத்தியோப்பியா – 5 கிராம்
தென் ஆப்பரிக்கா – 4 கிராம்
பிரேசில் – சராசரியாக 3 கிராம்
இந்தோனேஷியா – 2 கிராம்
மெக்ஷிக்கோ – 1.7 கிராம்
நைஜீரியா, செனிகல் – 1 கிராம்
பிலிப்பைன்ஸ் நாட்டில், பூஜ்ஜியம் அளவிலேயே சர்க்கரை அளவு உள்ளது.
நெஸ்ட்லே நிறுவனத்தின் முக்கிய சந்தையான ஐரோப்பாவில், சிறிய குழந்தைகளுக்கான நெஸ்ட்லே உணவுப் பொருள் தயாரிப்புகளில், சர்க்கரைகள் சேர்க்கப்படுவதே கிடையாதாம்.
அதாவது, 6 மாதத்தில் இருந்து 1 வயது கொண்ட குழந்தைகளின் உணவுப் பொருட்களில், சர்க்கரை சேர்ப்பது கிடையாது. நடுத்தர வயது கொண்ட குழந்தைகளின் உணவுப் பொருள் தயாரிப்புகளில் மட்டும் சர்க்கரை சேர்க்கப்படுகிறதாம்.
இந்த ஆய்வு முடிவுகள் எப்படி வெளியானது என்றால்?, பப்ளிக் ஐ நிறுவனம், ஆசியா, ஆப்பரிக்கா மற்றும் லேடின் அமெரிக்காவில் விற்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களின் Samples-களை, பெல்ஜியம் பகுதியில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு, பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தது.
அந்த ஆய்வில் தான், நிடோ மற்றும் செர்லாக் உணவுப் பொருட்களில், சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது. ஐரோப்பிய பகுதியின், உலக சுகாதார நிறுவனத்தின் வழிக்காட்டு நெறிமுறைகளின்படி, 3 வயதுக்கு கீழ் எந்தவொரு குழந்தைகளுக்கும், எந்தவொரு உணவுப் பொருட்களிலும், சர்க்கரைகள் சேர்க்கப்படக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.