Connect with us

Raj News Tamil

கழுத்தை பிடித்த நெட் பிளிக்ஸ்.. வழிக்கு வந்த அஜித்..

சினிமா

கழுத்தை பிடித்த நெட் பிளிக்ஸ்.. வழிக்கு வந்த அஜித்..

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை, ரூபாய் 75 கோடிக்கு, நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது.

படத்தின் திரையரங்க ரிலீஸ்-க்கு பிறகு, ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என்று ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால், நெட் பிளிக்ஸ் தரப்பு, கடும் கோபம் அடைந்துள்ளதாம்.

மேலும், வரும் தீபாவளிக்கு திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, பணத்தை மீண்டும் கொடுக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளதாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர், படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு விறுவிறுப்பாக இயங்கி வருகிறார்களாம். அஜித்தும் நிலைமையை புரிந்துக் கொண்டு, படக்குழுவினர்களுக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.

More in சினிமா

To Top