சந்திரமுகி படத்திற்கு பிறகு வெளியான ரஜினியின் அனைத்து படங்களும், பெரிய பட்ஜெட்டிலேயே எடுக்கப்பட்டு வந்தன.
ஆனால், ரஜினி தனது பாதையில் இருந்து விலகி, தற்போது சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அதன்ஒரு பகுதியாக தான், தற்போது தலைவர் 170 திரைப்படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதாவது, இந்த திரைப்படம், 160 கோடி ரூபாய் என்ற மிககுறுகிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம். இந்த பட்ஜெட்டில், ரஜினிக்கு 90 கோடி ரூபாய் சம்பளமும், மற்ற அனைத்து நடிகர்களுக்கும் சேர்த்து 40 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 30 கோடி ரூபாயில் தான், ஒட்டுமொத்த படமும் எடுக்கப்பட உள்ளதாம். சமீபத்தில் வெளியான ரஜினி படங்களிலேயே, இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு தான், மிகவும் குறைவான தொகை செலவிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.