தனக்கு எந்த இயக்குநர்களுடன் செட் ஆகிறதோ, அந்த இயக்குநர்களுடன் மட்டும் தான், அஜித் தொடர்ச்சியாக கூட்டணி வைப்பாராம்.
அதனால் தான், சிறுத்தை சிவா, எச்.வினோத் போன்ற இயக்குநர்களுடன், தொடர்ச்சியாக 3, 4 படங்களில் அவர் நடித்திருக்கிறார். அந்த வரிசையில், தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இணைய இருப்பதாக, நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
அதாவது, அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இதில், இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித் நடிக்கும் காட்சிகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் சரி என்று சொல்லாமல் இருக்கிறாராம்.
தொடர்ந்து ரீடேக் கேட்டுக் கொண்டே இருக்கிறாராம். இதனால், அஜித்திற்கு அவரது படத்தில் நடிப்பதில் சில சங்கடங்கள் ஏற்படுகிறதாம்.
ஆனால், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பின்போது, முதல் டேக்கிலேயே காட்சிகளை, ஆதிக் ரவிச்சந்திரன் ஓகே செய்துவிடுகிறாராம்.
எனவே, அஜித்தும் மிகவும் கம்ஃபர்டபிளாக இருக்கிறாராம். இதன்காரணமாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்தடுத்த படங்களில், அஜித்து நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.