தமிழ் சினிமாவில், அதிக அளவில் வெற்றி சதவீதத்தை கொண்டிருப்பவர் என்றால் அது வெற்றிமாறன் தான். கிட்டதட்ட இவர் இயக்கிய 90 சதவீத திரைப்படங்கள், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துவிடும்.
இதற்கு காரணம் என்னவென்றால், உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவும், சிறிய லாஜிக்குகள் கூட மிகவும் சரியாகவும் இடம்பெற்றிருக்கும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள விடுதலை 2 திரைப்படத்தில், லாஜிக் மிஸ்டேக் ஒன்று உள்ளது.
அதனை ரசிகர்கள் கண்டுபிடித்து, கலாய்த்து வருகின்றனர். அதாவது, விடுதலை முதலாம் பாகத்தில், போலீஸ் வேடத்தில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நடித்திருப்பார்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தில், அதே வேல்ராஜ், ஜமீன்தார் வேடத்தில் நடித்துள்ளார். இதனை கண்டுபிடித்துள்ள ரசிகர்கள், கலாய்த்து வருகின்றனர்.